Monday, May 4, 2009

மீன் வறுவல்


தேவையான பொருள்கள்

மீன் (வஞ்சரம்) - 1
சிறிய வெங்காயம் - 10முதல் 15 (அரைத்துக் கொள்ளவும்)
பூண்டு - 5 அல்லது 6 வரை (அரைத்துக் கொள்ளவும்)
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3-4 மேசைக்கரண்டி
மஞ்சள்த்தூள் - சிறிது
உப்பு - சிறிது

செய்முறை

1. எல்லா பொருள்களையும் மீனோடு சேர்த்து 2-3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பின்னர், தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாகிய பின் மீனைப் போட்டு வறுத்து எடுக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
3. சாம்பார் சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்.

3 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

இனியவள் புனிதா

:-) சுவையான சமையல் குறிப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு!!

VIKNESHWARAN

படித்ர்கதும் நா ஊறுகிறது :)

கீதா ஆச்சல்

மீன் வருவல் சூப்பர்...

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP