Wednesday, March 18, 2009

உருளைக் கிழங்கு சாட் மசாலா

பொதுவாகவே நுண்ணலை அடுப்பைக் கொண்டு நாம் இந்திய சமையல் வகைகளை சமைப்பது குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் உணவை சூடுப்படுத்தவும் அப்பளம், அணிச்சல், வறனி, நீணல் மற்றும் பாப்கார்ன் போன்ற மேற்கத்திய உணவு வகைகளைத் தயாரிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.

இதற்கு மாற்றாக இன்று இந்திய உணவு வகை சமையல் ஒன்றைச் செய்துப் பார்க்கலாம்.


தேவையானவை (4-5 பேர்)

உருளைக் கிழங்கு - 5

மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

சாட் மசாலா(கரம் மசாலா + கறுப்பு உப்பு) - 4 தேக்கரண்டி

சீனி - 3 தேக்கரண்டி

பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி


செய்முறை

1. முதலில் உருளைக் கிழங்குகளை 7 அல்லது 8 நிமிடங்களுக்கு வேக வைத்துக் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

2. சாட் மசாலைவை 4 தேக்கரண்டி நீரில் கரைத்து அதனுடன் கரைத்து வைத்திருக்கும் சீனி, மல்லித்தூள், கரம் மசாலை மற்றும் எலுமிச்சைச்சாறு கலக்கவும்.

3. மேற்கண்ட கலவையை உருளைக்கிழங்கோடு சேர்த்து நுண்ணலை அடுப்பில் 50 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

4. கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து பரிமாறவும்.

17 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

ஜோதிபாரதி

ஆகா! அருமை!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

வெரி குட்.. இது தான் குரு தட்சணையா? :))

இந்த வார இறுதியில் முயற்சி பண்றேன்.. நன்றிங்கோ மாமி.. :)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

/ஜோதிபாரதி

ஆகா! அருமை!
//

ஜோதி சார், வீட்ல நீங்க தான் சமையல் துறையா? :))

இனியவள் புனிதா

//ஜோதிபாரதி said...
ஆகா! அருமை!//

சமைச்சு பார்க்காமலேயா :-)

இனியவள் புனிதா

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
வெரி குட்.. இது தான் குரு தட்சணையா? :))

இந்த வார இறுதியில் முயற்சி பண்றேன்.. நன்றிங்கோ மாமி.. :)//

:-) புரிஞ்சா சரி..எனிவே டேங்க்ஸ் தாத்தா வருகைக்கும் கருத்துக்கும்!!!

ஜோதிபாரதி

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

/ஜோதிபாரதி

ஆகா! அருமை!
//

ஜோதி சார், வீட்ல நீங்க தான் சமையல் துறையா? :))//

நான் சமைப்பது எனக்கு வேணும்னா பிடிக்கும்.
யாரையும் நான் கட்டாயப் படுத்த முடியாது Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ! :)

ஜோதிபாரதி

//இனியவள் புனிதா said...

//ஜோதிபாரதி said...
ஆகா! அருமை!//

சமைச்சு பார்க்காமலேயா :-)//

என் மீது அவ்வளவு கோபமா?
சமைத்துப் பார்க்கச் சொல்கிறீர்களே?
நான் சாப்பிடக் கூடாதா? அல்லது சாப்பிட முடியாதா? :)

இனியவள் புனிதா

//என் மீது அவ்வளவு கோபமா?
சமைத்துப் பார்க்கச் சொல்கிறீர்களே?
நான் சாப்பிடக் கூடாதா? அல்லது சாப்பிட முடியாதா? :)//

:-)))

ஜோதிபாரதி

அணித்தல் -
நீணல் -
வறனி -

அருஞ்சொற்பொருள் தருக!
நன்றி!

இனியவள் புனிதா

அணிச்சல் - Cake
நீணல் - Instant Noodles
வறனி - Cookies

Thooya

Let me try today..:)

ஜோதிபாரதி

//இனியவள் புனிதா said...

அணிச்சல் - Cake
நீணல் - Instant Noodles
வறனி - Cookies//

தகவலுக்கு நன்றி இனியவள் புனிதா!

எந்த சொற்களஞ்சியத்தில் இருந்து தகவல் கிடைக்கப் பெற்றீர்கள் அல்லது தாங்கள் உருவாக்கிய சொற்களா என்று தெரிந்து கொள்ளலாமா?

இனியவள் புனிதா

எந்த சொற்களஞ்சியத்தில் இருந்து தகவல் கிடைக்கப் பெற்றீர்கள் அல்லது தாங்கள் உருவாக்கிய சொற்களா என்று தெரிந்து கொள்ளலாமா?

//http://aivukalam.6te.net/kalaisol/foods.htm//

ஜோதிபாரதி

நன்றி இனியவள் புனிதா!
தொடுப்பு வேறு இணைய பக்கத்திற்கு போகிறது!
கொஞ்சம் சரி செய்ய இயலுமா?

இனியவள் புனிதா

தமிழியல் ஆய்வுக் களம்

இனியவள் புனிதா

//Thooya said...
Let me try today..:)//

நன்றி தூயா வருகைக்கும் கருத்துக்கும் :-)

VIKNESHWARAN

//தேவையானவை (4-5 பேர்)//

இதை அளவு என போடலாம்.

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP