Wednesday, March 18, 2009

உருளைக் கிழங்கு சாட் மசாலா

பொதுவாகவே நுண்ணலை அடுப்பைக் கொண்டு நாம் இந்திய சமையல் வகைகளை சமைப்பது குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் உணவை சூடுப்படுத்தவும் அப்பளம், அணிச்சல், வறனி, நீணல் மற்றும் பாப்கார்ன் போன்ற மேற்கத்திய உணவு வகைகளைத் தயாரிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.

இதற்கு மாற்றாக இன்று இந்திய உணவு வகை சமையல் ஒன்றைச் செய்துப் பார்க்கலாம்.


தேவையானவை (4-5 பேர்)

உருளைக் கிழங்கு - 5

மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

சாட் மசாலா(கரம் மசாலா + கறுப்பு உப்பு) - 4 தேக்கரண்டி

சீனி - 3 தேக்கரண்டி

பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி


செய்முறை

1. முதலில் உருளைக் கிழங்குகளை 7 அல்லது 8 நிமிடங்களுக்கு வேக வைத்துக் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

2. சாட் மசாலைவை 4 தேக்கரண்டி நீரில் கரைத்து அதனுடன் கரைத்து வைத்திருக்கும் சீனி, மல்லித்தூள், கரம் மசாலை மற்றும் எலுமிச்சைச்சாறு கலக்கவும்.

3. மேற்கண்ட கலவையை உருளைக்கிழங்கோடு சேர்த்து நுண்ணலை அடுப்பில் 50 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

4. கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து பரிமாறவும்.

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP