Friday, January 9, 2009

அடுக்கு பலகாரம் (Kuih Lapis)

இது இனிப்பு வகை பலகாரம். இதற்குத் தேவையான பொருள்கள் கீழ்வருமாறு,

1 1/2 கப் மைதா மாவு
1/4 கப் அரிசி மாவு
1/4 கப் சோள மாவு
1/2 கப் சக்கரை
3 கப் தேங்காய் பால்
1 தேக்கரண்டி உப்பு
சிவப்பு வர்ணம் (உணவுக்காக பயன்படுத்துவது)
ரோஸ் எசன்ஸ் (தேவையானால்)

செய்முறை

1. இது வேக வைக்கும் முறையில் செய்யக்கூடிய பலகாராம். ஆகையால் வேக வைக்கக்கூடிய தட்டில் கொஞ்சம் மார்ஜெரின் அல்லது எண்ணெய் பூசி அடுப்பில் வைக்கவும்.
2. பிறகு, சிவப்பு வர்ணம், ரோஸ் எசன்ஸ் தவிர எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
3. கலவையை 2 ஆக பிரித்து கொள்ளவும்.
4. பிரித்து வைத்துள்ள ஒரு கலவையில் ரோஸ் எசென்ஸ் உம் சிவப்பு வர்ணத்தையும் கலந்து கொள்ளவும். இன்னொரு கலவை வெள்ளையாகவே இருக்கட்டும்.
5. இப்பொழுது வெள்ளையான கலவையில் இருந்து 2 தோசைக்கரண்டி அளவு எடுத்து சூடாகியுள்ள தட்டில் ஊற்றவும். இதனை 6 முதல் 8 நிமிடங்களுக்கு விட்டுவிடவும். பிறகு இதே அளவு போல் சிவப்பு வர்ண கலவையை ஊற்றி வேகவிடவும். மீதமுள்ள கலவையையும் இதே போல் மாற்றி மாற்றி செய்யவும்.

பின்குறிப்பு :- எல்லா அளவைக்கும் ஒரே அளவான கப் பயன்படுத்தவும்.

5 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

சரிதா

அட அசத்துறீங்க சுபா :-) எனக்குக்கூட மிகவும் பிடித்த பலகாரமிது!!!

Subha

இது நம்ம favourite இல்ல...:)

மு.வேலன்

நன்று.

Ammu Madhu

சுபா கலக்கறீங்க...ஸ்வீட் கலர் பார்த்தும் சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது ..செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்..

அன்புடன்,
அம்மு.

suvaiyaana suvai

interesting Sweet!!!!
http://susricreations.blogspot.com

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP