Friday, January 9, 2009

மேகி கோரேங் (Fried Maggie)

மலேசியாவின் புகழ்ப்பெற்ற உணவு வகைகளில் இதுவும் ஒன்று. அநேகமாய் அசைவமாய் சமைக்கப்பட்டாலும் நம் விருப்பத்திற்கேற்ப சைவமாகவும் சமைக்கலாம். மிகவும் சுலபமான சமையல் குறிப்பு இது. எப்பொழுதுமே அவித்து மட்டும் சாப்பிட்டு அலுத்தவர்கள் புது விதமாய் சமைத்து உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிமாறி மகிழுங்களேன் ;-)

தேவையானவை
2 பேக்கட் மேகி மீ அல்லது இன்ஸ்டண்ட் நூடல்ஸ் (கறி சுவை)
1 வெங்காயம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
1 நறுக்கிய தக்காளி
பூண்டு விழுது
2 சிவப்பு மிளகாய் (நறுக்கிக் கொள்ளவும்)
கடுகுக்கீரை, முட்டைகோஸ், பட்டன் காளான் மற்றும் கேரட் (சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்)
சமையல் எண்ணெய் (தேவைக்கேற்ப)
பொறித்த Taufu (முட்டை)
1 மேஜைக்கரண்டி காய்ந்த மிளகாய்த் தூள்
சோயா சாஸ்
1 தேக்கரண்டி மிளகுத்தூள்
1 1/2 பேக்கட் மேகி கறி சீசனிங் பவுடர்

செய்முறை
1. மேகி நூடல்ஸை அவித்து (1 நிமிடம்) வடிக்கட்டிக் கொள்ளவும்
(மேகி அவிக்க பயன்படுத்திய நீரை பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்)
2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு விழுதையும் நறுக்கிய வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கவும்.
3. 1 1/2 பேக்கட் மேகி சீசனிங் பவுடர், மிளகாய்த்தூள், சிவப்பு மிளகாய், நறுக்கிய தக்காளி, கடுகுக்கீரை, முட்டைகோஸ், பட்டன் காளான் மற்றும் கேரட்டையும் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு, மேகி அவித்த வடிக்கட்டிய நீரை தேவையான அளவு சேர்த்து வேக வைக்கவும். (1 நிமிடம்)
5. கடைசியாக அவித்து வைத்திருக்கும் மேகி நூடல்ஸைக் வதக்கிய கலவையில் கொட்டி சோயா சாஸ் சேர்த்துக் கிளரவும்.
6. பொறித்த Taufu அல்லது முட்டையை இதனுடன் சேர்த்து சூடாக பரிமாறலாம்

பின் குறிப்பு : முட்டையின் வாடையை போக்க நாம் மிளகுத்துளை பயன்படுத்துவது வழக்கம். அப்படியும் போகவில்லையெனில் சிறிது புளிநீரை முட்டையில் சேர்த்து அடித்து பொரிக்கலாம்.

3 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

மு.வேலன்

//மலேசியாவின் புகழ்ப்பெற்ற உணவு வகைகளில் இதுவும் ஒன்று.//

அது மட்டுமல்ல. இது மலேசிய நாட்டின் தேசிய உணவுபோல் போற்றப்படுகிறது.

* என் பொது அறிவை வளர்பதற்கு ஒரு விண்ணப்பம்: தேவையான பொருட்களின் பெயர்களை தமிழில் பதிய கூடாதா?

நன்றி.

இனியவள் புனிதா

//மு.வேலன் said...
//மலேசியாவின் புகழ்ப்பெற்ற உணவு வகைகளில் இதுவும் ஒன்று.//

அது மட்டுமல்ல. இது மலேசிய நாட்டின் தேசிய உணவுபோல் போற்றப்படுகிறது.

* என் பொது அறிவை வளர்பதற்கு ஒரு விண்ணப்பம்: தேவையான பொருட்களின் பெயர்களை தமிழில் பதிய கூடாதா?

நன்றி.//

;-))

சென்ஷி

:-))

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP