Saturday, January 31, 2009

சீஸ் சாக்லேட் ப்ரோவ்னிஸ்

கடந்த சீன புத்தாண்டு விடுமுறையின் போது நான் மிகவும் ரசித்து செய்த பலகாரமிது. நான் ரசித்து செய்ததால் மிகவும் ருசியாகவும் கூட வந்தது. :)

தேவையான பொருள்கள் :

கலவை 1

150 கிராம் சமையல் சாக்லேட்
120 கிராம் வெண்ணெய் (பட்டர்)
60 கிராம் மைதா மாவு (கேக் மாவும் உபயோகபடுத்தலாம்)
1 மேசைக்கரண்டி சக்கரை
1 முட்டை
1 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
1 தேக்கரண்டி வெனிலா எசென்ஸ்

கலவை 2

250 கிராம் க்ரீம் சீஸ்
1 முட்டை
50 கிராம் சக்கரை

செய்முறை :

1. சாக்லேட் மற்றும் பட்டர் ஆகியவற்றை கரைத்து கொள்ளவும்.
2. பின், இதனுடன் கலவை 1 இல் உள்ள மற்ற அனைத்துப் பொருள்களையும்
ஒன்றாக கலக்கவும்.
3. இதனை கேக் தட்டில் வைத்து 15 நிமிடம் வேகவைக்கவும்.
4. பின்னர் கலவை 2 இல் உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாக கலந்து
வேகவைத்துள்ள சாக்லேட் கலவையின் மேல் ஊற்ற வேண்டும்.
5. 30 நிமிடங்களுக்கு நன்றாக வெந்த பின் ஐஸ் பெட்டியில் வைத்து பிறகு
பரிமாறவும்.

(பின் குறிப்பு : அவிக்கும் முறையில் வேகவிடவும்)

2 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

சரிதா

//நான் ரசித்து செய்ததால் மிகவும் ருசியாகவும் கூட வந்தது. :)//

அட அட அசத்துங்க சுபா :-)எனக்கும் அனுப்பி வைங்களேன் அணிச்சலை.. என்னது முடிஞ்சதா??

NewsPaanai.com

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP