Tuesday, January 13, 2009

ஆட்டிறைச்சி மசாலா

தேவையான பொருள்கள் :-

எலும்பில்லாத ஆட்டிறைச்சி - 900 gm
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாறு - 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 அல்லது 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
மிளகு - 6 அல்லது 7
கிராம்பு - 7 அல்லது 8
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - கொஞ்சம் நறுக்கியது (அலங்கரிக்க)

செய்முறை :-

1. அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.
2. எண்ணெய் சூடாகியதும் சீரகத்தைப் போடவும். சீரகத்தின் வெடிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமாகிய பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
4. 2-3 நிமிடங்கள் கழிந்த பின் இறைச்சியை அதனுடன் சேர்க்கவும். 3-4 நிமிடங்களுக்குப் பிறகு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை இறைச்சியில் சேர்க்கவும்.
5. இறைச்சியின் வர்ணம் பொன்னிறமாக மாற ஆரம்பித்த பிறகு தக்காளி சாறு, பட்டை, கிராம்பு மற்றும் மிளகு சேர்க்கவும். இதனை 2-3 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும்.
6. பிறகு வாணலியில் இறைச்சியின் அளவு உள்ளவரை நீர் ஊற்றி 30-35 நிமிடங்களுக்கு வேகவிடவும். அடிபிடிக்காமல் இருக்க கொஞ்சம் நீர் இடையில் சேர்த்துக்கொள்ளலாம்.
7. கடைசியாக கொத்தமல்லி இறைச்சியின் மேல் தூவி அலங்கரிக்கவும்.

9 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

இனியவள் புனிதா

டீச்சர்..ஆட்டிறைச்சிக்குப் பதிலாக சோயாமேட்டை(soyamate) பயன்படுத்தலாமா..விளக்கம் ப்ளீஸ்!!!

மு.வேலன்

சமையலை விட சமயல் குறிப்பு மிகவும் அருமை! தமிழ் உணர்வை உணவின் மேல் தூவி தூய உணவை பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்துக்கள்!

பிகு: 'மட்டன் மசாலா'-வை தமிழிலேயே பெயர் வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சென்ஷி

//7. கடைசியாக கொத்தமல்லி இறைச்சியின் மேல் தூவி அலங்கரிக்கவும்.//

பிறகு பார்சல் செய்து ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கவும். சாப்பிட்டு கருத்து சொல்கிறோம்.. :-))

குடுகுடுப்பை

ஆகா மறுபடியும் பசிக்குதே,சரி காணும் பொங்கல் காரணத்தை சொல்லி ஒரு வெட்டு வெட்டிடறேன்

சுபாஷினி

//ஆட்டிறைச்சிக்குப் பதிலாக சோயாமேட்டை(soyamate) பயன்படுத்தலாமா..விளக்கம் ப்ளீஸ்!!!//

புனிதா, முயற்சி செய்து பாருங்களேன்..நல்லா வந்தா என்கிட்ட சொல்லுங்க :)

சுபாஷினி

//பிறகு பார்சல் செய்து ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கவும். சாப்பிட்டு கருத்து சொல்கிறோம்.. :-))//

அடடா...எந்த கொரியர் ல அனுப்பனும் சொல்லுங்க சென்ஷி :)

சுபாஷினி

//ஆகா மறுபடியும் பசிக்குதே,சரி காணும் பொங்கல் காரணத்தை சொல்லி ஒரு வெட்டு வெட்டிடறேன்//

குடுகுடுப்பைக்காரரே, இப்படியுமா :)

சென்ஷி

//சுபாஷினி said...
//பிறகு பார்சல் செய்து ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கவும். சாப்பிட்டு கருத்து சொல்கிறோம்.. :-))//

அடடா...எந்த கொரியர் ல அனுப்பனும் சொல்லுங்க சென்ஷி :)
//


கேரியர்ல பேக் பண்ணி எந்த கூரியர்ல அனுப்பினாலும் ஓக்கேதான். மறக்காம மேல சென்ஷிக்காகன்னு எழுதிடுங்க‌

சென்ஷி

/சுபாஷினி said...
//ஆட்டிறைச்சிக்குப் பதிலாக சோயாமேட்டை(soyamate) பயன்படுத்தலாமா..விளக்கம் ப்ளீஸ்!!!//
//

அடடடடா... இந்த சைவம் மாத்திரம் சாப்பிடுறவங்க தொல்லை தாங்க முடியலைப்பா.. :))

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP