Thursday, January 8, 2009

கார இறால் (ஊடாங் சம்பால்)

அடடா...பார்க்கும்போதே உமிழ்நீர் ஊர்கிறதே. இதை எப்படி செய்வது என யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்...இதோ என் கைமணம் உங்களுக்காக...:)

தேவையானவை :

இறால் (prawns) - 500 gm
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி - பாதி
புளி நீர் - சிறிது அல்லது தேவையான அளவு
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்த் தூள் - 3 அல்லது 4 மேசைக்கரண்டி (காரத்துக்கு ஏற்ப)
உப்பு - தேவையான அளவு
சக்கரை - தேவையான அளவு

செய்முறை :

1. இறாலை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
2. வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை வாணலியில் போட்டு வதக்கவும்.
3. பின், தக்காளி, சீரகத் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை வதக்கிய பின் கொஞ்சம் நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
4. உப்பும் 1/2 தேக்கரண்டி சக்கரையும் சேர்த்துக்கொள்ளவும்.
5. இப்பொழுது இறாலைப் போடவும்.
6. கடைசியாக புளி நீர், தேவைப்பட்டால் கொத்தமல்லி போட்டு இறக்கலாம்.

பின் குறிப்பு :- அதிக சுவைக்கு தேங்காய்ப்பாலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

4 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

இனியவள் புனிதா

சூப்பரா இருக்கு போல :-)

.:: மை ஃபிரண்ட் ::.

நினைக்க நினைக்க வாய் ஊருது..

அதுவும் மிளகாய் அறைத்து போட்டு சம்பால் செய்தால்.. ஆஹா.. என்ன ருசி என்ன ருசி. :-)

மு.வேலன்

கார இறால் செய்ய எதற்கு சக்கரை தேவையான அளவு?

இனியவள் புனிதா

//மு.வேலன் said...
கார இறால் செய்ய எதற்கு சக்கரை தேவையான அளவு?//

காரம் பிடிக்காதவர்களுக்கு ;-)

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP