கிச்ரி சாதம்
தேவையானவை
பஸ்மதி - 240 கிராம்
மைசூர் பருப்பு (Lentils) - 120 கிராம்
வெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1 (சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்)
இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 1 (நறுக்கிக் கொள்ளவும்)
குறுமிளகு - 6
Bay இலை - 1
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை
1. அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து 1 மணி நேரத்திற்கு ஊற வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்
2. கடாயில் மிதமான சூட்டில் 3 மேஜைக்கரண்டி வெண்ணெய் விடவும்
3. நுறைத்த வெண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 4 நிமிடத்துக்கு வதக்கவும்
4. தொடர்ந்து உப்பு, இஞ்சி, பூண்டு விழுதோடு Bay இலையை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
5. வடிக்கட்டி வைத்திருக்கும் அரிசியை இந்த கலவையில் கொட்டி மேலும் 5 நிமிடத்துக்கு கிளறவும்
6. 625மி.லி கொதிக்க வைத்த நீரையூற்றி கிளறி 15-20 நிமிடத்துக்கு மூடி வைக்கவும்
7. சாதம் வெந்தவுடன் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் விட்டு கிளறி பரிமாறலாம்


